Home /News /sports /

நியூசிலாந்து போட்டியில் 'விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை? பிசிசிஐ விளக்கம்

நியூசிலாந்து போட்டியில் 'விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை? பிசிசிஐ விளக்கம்

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

விஜய் சங்கர் இந்திய அணியில் ஏன் இடம்பெறவில்லை என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

  • News18
  • Last Updated :
நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விஜய் சங்கர் ஏன் இடம்பெறவில்லை என்று பி.சி.சி.ஐ விளக்கமளித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

உலகக் கோப்பைத் தொடருக்கு முன் அனைத்து அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.



நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் இடம்பெறவில்லை. விஜய் சங்கர் இந்திய அணியில் ஏன் இடம்பெறவில்லை என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். “வலைப்பயிற்சியின் போது  விஜய் சங்கருக்கு வலது தோள்பட்டையில் பலமாக காயம் ஏற்பட்டதாக“ பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.



மேலும் விஜய் சங்கரை ஸ்கேன் செய்து சோதித்து பார்த்ததில் அவருக்கு எந்த ஒரு பெரிய காயமோ, எலும்பு முறிவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மே28-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்… பயிற்சியின் போது இளம்வீரர் காயம்…!

Also Read : உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : தென்னாப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை!

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி