• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தோனியைப் போல் வேறு யாரும் செய்ததில்லை: உலகக்கோப்பையை வென்ற கேப்டன் புகழாரம்!

தோனியைப் போல் வேறு யாரும் செய்ததில்லை: உலகக்கோப்பையை வென்ற கேப்டன் புகழாரம்!

உலகக்கோப்பை உடன் தோனி. (AFP)

உலகக்கோப்பை உடன் தோனி. (AFP)

No cricketer has served India like #MSDhoni: #KapilDev | 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தோனியைப் போல் இந்தியாவுக்காக வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இவ்வளவு செய்ததில்லை என உலகக்கோப்பையை வென்ற அணி கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தவர் ஆல்ரவுண்டர் கபில் தேவ்.

    பின்னர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் அப்போதையை கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என பெருமைக்கு இன்றளவும் சொந்தக்காரராக தோனி இருக்கிறார். 37 வயதாகும் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற பலரின் கேள்விக்கு தனது பேட்டால் பதிலளித்து வருகிறார்.

    MS Dhoni, மகேந்திர சிங் தோனி.
    மகேந்திர சிங் தோனி. (ICC)


    இங்கிலாந்தில் வரும் மே 30-ம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் தோனியும் இடம்பிடித்துள்ளார்.

    இந்நிலையில், தோனியின் உலகக்கோப்பை பங்களிப்பு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், “தோனி பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் நாட்டிற்காக நன்கு பணியாற்றி வருகிறார் என நான் நினைக்கிறேன், அவரை மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    Kapil Dev, கபில் தேவ்
    1983 உலகக்கோப்பை உடன் கபில் தேவ். (Getty Images)


    மேலும், “அவர் இன்னும் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார்? எவ்வளவு காலம் அவரது உடல் ஒத்துழைக்கும் என யாருக்கும் தெரியாது. தோனியைப் போல் நாட்டிற்காக வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இவ்வளவு செய்ததில்லை. அவர் இந்த உலகக்கோப்பையையும் வென்றுகொடுப்பார் என நான் நம்புகிறேன்” என்று கபில் தேவ் கூறினார்.

    மைதானமே இல்லாத ஊரில் இருந்து வரலாறு படைத்த கோமதி: கண்கலங்க வைக்கும் பின்னணி!

    Also Watch...



    அஸ்வினை வைத்து மான்கட் முறையில் விக்கெட் எடுக்கலாம் - கலாய்த்த ஸ்டெயின்










    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: