ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை… அதிகாரிகள் தகவல்

இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை… அதிகாரிகள் தகவல்

இந்தியா பாகிஸ்தான் அணி கேப்டன்கள் ரோகித் சர்மா - பாபர் ஆசம்

இந்தியா பாகிஸ்தான் அணி கேப்டன்கள் ரோகித் சர்மா - பாபர் ஆசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்தவுள்ளது. அடுத்த உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகில் எங்குமே நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை நடத்த ஆர்வமாக உள்ளோம் என்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இரு தரப்பு நாடுகளில் நடைபெறுவதில்லை. 2007-க்கு பின்னர் இரு நாட்டு அணிகளும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில்தான் மோதிக் கொள்கின்றன.

இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்த விரும்புவதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் கூறியிருந்தது. இதுதொடர்பாக அதன் செயல் அதிகாரி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் அளித்த பேட்டியில்  இந்தியா பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம். இங்கு 90,293 ரசிகர்கள் அமர்ந்து சிறப்பு மிக்க உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை கண்டு ரசித்தனர். அந்த வகையில் நாங்கள் இந்தியா – பாகிஸ்தான் இடையே 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த விரும்புகிறோம்.

இது மிகவும் கடினமான பணி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் நாங்கள் அதிக சவாலான வேலைகளை செய்வதற்குத்தான் விரும்புகிறோம். இப்படி நடந்தால் அது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெய்ன்மென்டாக அமையும் என்று கூறியிருந்தார்.

அதேநேரம் 2023 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இரு நாடுகளின் போட்டி அட்டவணையில் இரு தரப்பு போட்டிகள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள  கருத்து குறித்து, பிசிசிஐ அதிகாரிகள் சிலர் பதில் அளித்துள்ளார்கள். அதாவது உலகில் எந்த இடத்திலுமே இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டை 

போராடி டிரா செய்த பாகிஸ்தான்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்தவுள்ளது. இதேபோன்று அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்… 2ஆம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணி…

இவ்விரு போட்டிகளிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அண்டை நாட்டிற்கு செல்லுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

First published:

Tags: India vs Pakistan