ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேப்டன் பொறுப்பில் தொடர்வாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

கேப்டன் பொறுப்பில் தொடர்வாரா ரோகித் சர்மா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 31 டி20 போட்டிகளில் வழி நடத்தியுள்ளார். இதில் 26 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்காக தற்போது தயாராகி வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரையடுத்து இந்திய அணி தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி, கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல். ராகுலும் நீடிக்கின்றனர். இலங்கை தொடருக்கு பின்னர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளிலும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இந்நிலையில் பிசிசிஐ –யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று கூடியது. மும்பையில் நடந்த இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஸ்மன், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தின்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி எப்படி சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, முக்கியமாக பேசப்பட்டது.

இதன் அடிப்படையில் 20 பேர் கொண்ட உத்தேச அணியும் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்.

உலகக்கோப்பை தொடர் முடியும் வரையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா 31 டி20 போட்டிகளில் வழி நடத்தியுள்ளார். இதில் 26 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்று 13 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

First published:

Tags: Rohit sharma