எப்போதும் நம்பர் 7-தான் தோனியின் ராசியான நம்பர்!

எப்போதும் நம்பர் 7-தான் தோனியின் ராசியான நம்பர்!

ஜெர்சி நம்பரில் தோனி செய்த சாதனை.

why Dhoni deserves No. 7 | மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஜெர்சி நம்பரான 7-ம் எண்ணில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது.

  பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது.

  india, australia, விராட் கோலி, பிஞ்ச்
  ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இரு அணிகளின் கேப்டன்கள். (BCCI)


  மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.

  team india, இந்திய அணி
  வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (Cricket Australia)


  கடைசி ஒரு நாள் போட்டியில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 7-ம் நம்பரில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற்ற விக்கெட்டுகளின் வித்தியாசம் 7. தற்போது, தோனியின் வயது 37. கடைசிப் போட்டியில் அவர் அடித்த ரன்கள் 87.

  Dhoni, தோனி
  7-வது முறையாக ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (BCCI)


  இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த தோனி, 7-வது முறையாக தொடர் நாயகன் விருதைப் பெற்றார். ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை 7 ஆண்டுகளுக்குப்பின், தோனி பெற்றுள்ளார். இதன்மூலம், தோனியின் ராசியான நம்பர் 7 என்பது தெளிவாகியுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

  ஆஸ்திரேலிய மண்ணில் தோனி செய்த சாதனை!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: