ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி

Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 7:39 PM IST
ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி
ஐசிசி
Web Desk | news18-tamil
Updated: August 8, 2019, 7:39 PM IST
டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் ஜிம்பாப்வே அணி பதிலாக நைஜீரியா அணியை களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

கிரிக்கெட்டில் அரசியலை புகுத்தியதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி விளையாட ஐசிசி தடைவிதித்தது. ஐசிசியின் இந்த முடிவு எங்களின் வாழ்வதாரத்தை முழுவதுமாக பாதிக்கும் இதனை மறுபரீசலனை செய்ய வேண்டுமென அந்நாட்டு வீரர்கள் விடுத்த கோரிக்கையும் ஐசிசி நிரகாரித்தது.

ஜிம்பாப்வே அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் நடைபெற உள்ள டி20 தொடருக்கான தகுதி சுற்றில் இடம்பெற முடியாது. ஜிம்பாப்வே அணிக்கு மாற்று அணியாக நைஜீரியா அணியை டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக நமீபியா மகளிர் அணி களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா, கென்யா, அயர்லாந்து. ஸ்காட்லாந்து, சிங்காப்பூர், நெதர்லாந்து, ஓமன் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.

தகுதி சுற்று போட்டிகளில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்பது குறிப்பிடதக்கது.

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...