ஹோம் /நியூஸ் /sports /

கிரிக்கெட்டில் தோல்வி... பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாவே அதிபர்

கிரிக்கெட்டில் தோல்வி... பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாவே அதிபர்

பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாவே அதிபர்..

பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாவே அதிபர்..

போலி மிஸ்டர் பீனை அனுப்பிய பாகிஸ்தானை தோற்கடிப்போம் என்று ஜிம்பாவே தரப்பினரும், ஜிம்பாவேயை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தானியர்களும் இணையத்தில் காரசாரமாக விவாதம் நடத்தி வந்தனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில், பெர்த்தில் நடைபெற்ற போட்டியில், தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள ஜிம்பாவே அணியிடம்

    முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி 1 ரன்னில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

    இந்த தோல்வி தொடர்பாக பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதேவேளையில், மிஸ்டர் பீம் நிகழ்ச்சியை வைத்து பலரும் பாகிஸ்தானை கேலி செய்து வருகின்றனர். Mr. Beanக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லையே ... பாகிஸ்தானுடன் ஜிம்பாவே தோற்ற நிலையில் ஏன் அனைவரும் Mr.Bean குறித்து பேசுகின்றனர் என்பது புது விஷயமாக தோன்றலாம். முன்னர் பாகிஸ்தான் பண்ணிய ஒரு சம்பவத்தின் நினைவுகூரல் இது.

    முழு வளர்ச்சியடைந்த மனிதனிடம் காணப்படும் குழந்தைத்தனமான குறும்புகளை விவரித்து 1990களில் இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் வெளியான இந்த தொடர் குழந்தைகள் மட்டுமன்றி, பெரியவர்களிடையேயும் வரவற்பு பெற்றது. இதில் Mr.Bean கதாபாத்திரத்தில், அதை எழுதிய Rowan Atkinson நடித்திருந்தார்.

    கடந்த 2016 ஆம்ஆண்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக Mr.Bean என்றழைக்கப்படும் ரோவன் அட்கின்சன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு பதிலாக அதே போன்ற தோற்றமுடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசீப் முகம்மது, மிஸ்டர் பின் என்று ஏமாற்றி பங்கேற்க வைக்கப்பட்டார். எனினும் அந்த நிகழ்ச்சி நடைபெறும்போதே இவர் போலியானவர் என்று புரிந்தது. இதனால் சின்பாவே மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதையும் படிங்க: பிடித்த ஜெர்ஸி நம்பர் என்ன? சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா அளித்த நச் பதில்!

    நினைவு கூர்ந்து இந்த சம்பவத்திற்கு கிரிக்கெட்டில் பழி தீர்ப்போம் என்று ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட தொடங்கினர். போலி மிஸ்டர் பீனை அனுப்பிய பாகிஸ்தானை தோற்கடிப்போம் என்று ஜிம்பாவே தரப்பினரும், ஜிம்பாவேயை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தானியர்களும் இணையத்தில் காரசாரமாக விவாதம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணியிடம் தோல்வியடைந்து சரிந்தது. போட்டியில் ஜிம்பாவே 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற, தனது அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஜிம்பாவே அதிபர் எமர்சன் டம்புட்ஸோ மனங்காக்வா, அடுத்த முறையாவது

    உண்மையான Mr.Bean-ஐ அனுப்பி வையுங்கள் என பாகிஸ்தானை கலாய்த்து பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி தந்த பாகிஸ்தான் பிரதமர் எங்களிடம் உண்மையான Mr.Bean இல்லாமல் இருக்கலாம் ஆனால், உண்மையான கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் உள்ளது என்றும் ஜிம்பாவே அதிபரே உங்கள் அணி சிறப்பாக விளையாடியது. வாழ்த்துகள் எனவும் தெரிவித்திருந்தார்.

    Mr.Bean விவகாரம் தற்போது கிரிக்கெட் உலகில் பற்றி எரிகிறது. ஜிம்பாவேவுக்கு வாழ்த்துதெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாசிம் ஜாபர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோரும் Mr.Bean படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கிரிக்கெட்டோடு மிஸ்டர் பீனும் வைரல் ஆகி வருகிறார்.

    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Mr Beans movie, Pakistan cricket, T20 World Cup, Zimbabwe