• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2020 ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தான் செல்லுமா இந்திய அணி?

2020 ஆசிய கோப்பை டி20: பாகிஸ்தான் செல்லுமா இந்திய அணி?

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (Getty Images)

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள். (Getty Images)

Next edition of #AsiaCup to be hosted by #PCB | இந்தியா பங்கேற்காமல் போனால், தொடரின் வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2020 ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதால், இந்திய அணி பங்கேற்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 1984-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முன்னின்று நடத்தி வருகிறது.

2018-ம் ஆண்டுக்கான 14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில், இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து, வரும் 2020 ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 ஓவர்களாக நடந்தப்பட்ட இந்த தொடர், இனி 20 ஓவர்களாக மாற்றப்பட்டது.

BCCI, PCB, ICC
களத்தில் இறங்கும் இந்திய அணி (வலது), பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி (Images: AFP)


கடந்த ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடந்தியது. ஆனால், பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதால், போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதேபோல், 2020 போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் இந்தியா பங்கேற்பது சந்தேகம்தான். அதனால், இரு நாட்டிற்கும் பொதுவான இடத்திற்கு போட்டி மாற்றப்படலாம்.

இந்திய அணி பங்கேற்காமல் போனால், தொடரின் வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்ப வாய்ப்பில்லை. இதுவரை, போட்டி நடத்தப்படும் நடத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்படவில்லை. போட்டி இடமாற்றம் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

Also Watch...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: