இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து லெவன் முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில், இந்திய அணியின் இளம் வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து லெவன் இன்று தொடங்கியது. இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர்கள் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, சைனி ஆகியோர் போட்டிப் போட்டு விக்கெட்களை எடுத்தனர்.
இதனால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் நியூசிலாந்து லெவன் அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, யாதவ், சைனி ஆகியோர் தல 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.