போராடி தோற்ற இந்திய அணி... தொடரை வென்றது நியூசிலாந்து

ஆட்ட நாயகன் விருது கொலின் முன்ரோவுக்கும், தொடர் நாயகன் விருது டிம் செய்பெர்ட் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது

போராடி தோற்ற இந்திய அணி... தொடரை வென்றது நியூசிலாந்து
இந்திய அணி
  • News18
  • Last Updated: February 10, 2019, 10:01 PM IST
  • Share this:
இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்ற நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. அந்த அணியின் டிம் செய்பெர்ட், கொலின் முன்ரோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 213 ரன்களை நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.


இதையடுத்து தனது ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் தவான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மாவுடன் கூட்டணி சேர்ந்து விஜய் சங்கர் சிறப்பாக விளையாடினார். ரோகித் சர்மா 38 ரன்களுக்கும், விஜய் சங்கர் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தோனி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கடை ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் 11 ரன்கள் மட்டுமே அடித்து இந்திய அணி தோல்வியடைந்தது.

இதையடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. ஆட்ட நாயகன் விருது கொலின் முன்ரோவுக்கும், தொடர் நாயகன் விருது டிம் செய்பெர்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Also watch

Loading...

First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...