ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

#INDvsNZ | ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்த நியூசிலாந்து..!

#INDvsNZ | ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்த நியூசிலாந்து..!

INDvsNZ

INDvsNZ

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியை நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுவதுமாக நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி ஏற்கனவே தொடரை வென்ற போதிலும் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்துடன் களமிறங்கியது.

தொடக்க வீரர் மயங்க அகர்வால் 1 ரன்னிலும் விராட் கோலி 9 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். 4வது வீரராக களமிறங்கிய ஷ்ரோயஸ் ஐயர் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். ப்ரிதிவ் ஷா 40 ரன் எடுத்திருந்த போது ரன்அவுட்டானார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கே.எல்.ராகுல் 113 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி 112 ரன்கள் குவித்து பென்னட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக குப்தில், நிக்கோலஸ் களமிறங்கினார். ஒரு நாள் தொடரில் ஜொலிக்க தவறிய இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சோகம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. நிதானமாக விளையாடிய குப்தில் - நிக்லோஸ் இருவரும் அரைசதம் கடந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். குப்தில் 66 ரன்னிலும் நிக்லோஸ் 80 ரன்னிலும் அவுட்டாகினர்.

காயம் காரணமாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 22 ரன்னில் வெளியேறினார். இறுதிகட்டத்தில் நியூசிலாந்து வீரர்

கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடினார். 28 பந்துகளில் 58 ரன்கள் குவித்து நியூசிலாந்தை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது. டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு பதலடி கொடுக்கும் வகையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து.

First published: