IND vs NZ | இந்திய அணி போராடி தோல்வி... தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து..!

IND vs NZ | இந்திய அணி போராடி தோல்வி... தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து..!
INDvsNZ
  • Share this:
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் - ஹென்டிரி நிக்கோலஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 93 ரன்னில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. நிக்கோலஸ் 41 ரன்னில் அவுட்டானர்.


அவரை தொடர்ந்து களமிறங்கிய டாம் ப்ளண்டெல் 22 ரன்னில் தாகூர் பந்துவீச்சில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் குப்தில் அரைசதம் கடந்த நிலையில் 79 ரன்களில் ரன்அவுட்டானார். நியூசிலாந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ரோஸ் டெய்லர் மட்டும் பொறுப்புடன் விளையாடினார்.

இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. டெய்லர் 73 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் தாகூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 3 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா 24 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 15 ரன்னில் அவுட்டாகினர்.சற்று நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் 52 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் அவுட்டானார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் இறுதியில் ரவீந்திர ஜடேஜா தனிஒருவராக வெற்றிக்கு போராடினார்.  இறுதியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில ்வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்