முகப்பு /செய்தி /விளையாட்டு / நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -ஆவது டெஸ்ட்… இங்கிலாந்து அணி ஆதிக்கம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 -ஆவது டெஸ்ட்… இங்கிலாந்து அணி ஆதிக்கம்

இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறி வருகிறது.

இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறி வருகிறது.

87.1 ஓவர் முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன்களை எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் 3- ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் 267 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், தற்போது 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹாமில்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி, இரு தரப்புக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிந்தது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டீம் சவுதி, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் க்ராவ்லி, டக்கெட் ஆகியோர் களத்தில் இறங்கினார். கிராவ்லி 2 ரன்னிலும்,டக்கெட் 9 ரன்னிலும் வெளியேற, அடுத்துவந்த ஒல்லியே போப் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறிக்கொண்டு இருந்தது. அப்போது இணைந்த ஜோ ரூட் - மற்றும் ஹரி புரூக் இணை ஆட்டத்தை சரிவிலிருந்து மீட்டு, வலுவான நிலைக்கு அணியை கொண்டு வந்தது. 3 விக்கெட்டுகள் 21 ரன்னில் விழுந்த நிலையிலும் இந்த இணை அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து ரன்களை குவித்தது. குறிப்பாக ஹரி புருக் ஒருநாள் போட்டியைப் போன்று விளையாடி சிக்சர் பவுண்டரிகளை விளாசினார். 5 சிக்சர் மற்றும் 24 பவுண்டரிகளுடன் அவர் 186 ரன்களை குவித்தார். ஜோ ரூட் 153 ரன்கள் எடுத்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களும், பிராடு 14 ரன்களும், ராபின்சன் 18 ரன்களும் எடுத்தனர்.

87.1 ஓவர் முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன்களை எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் டாம் லாதம் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே ரன் ஏதும் எடுக்காமலும், கேன் வில்லியம்சன் 4 ரன்னிலும், வில் யங் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவரின் விக்கெட்டையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார். ஹென்றி நிக்கோலஸ் 30 ரன்களும், டேவிட் மிட்ச்செல் 13 ரன்களும் எடுத்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல் 25 ரன்களும், கேப்டன் டிம் சவுதி 23 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த டெஸ்ட்டை போலவே, இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

First published:

Tags: Cricket