ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் நீக்கம்…

இந்திய தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய வீரர் நீக்கம்…

கேன் வில்லியம்சனுடன் மேட் ஹென்றி

கேன் வில்லியம்சனுடன் மேட் ஹென்றி

இரு அணிகளும் வலுவானவை என்பதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரரான மேட் ஹென்றி நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதனை முடித்துக் கொண்டு இந்த அணி இந்தியாவுடனான போட்டிகளில் விளையாட உள்ளது. பாகிஸ்தானுக்கு  எதிராக நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி டிரா செய்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கராச்சியில் தொடங்கியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளியன்று இதே கராச்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரை முடித்துக்கொண்டு அடுத்ததாக இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையே 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முக்கிய பந்து வீச்சாளரான மேட் ஹென்றி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்திய தொடரில் இடம்பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக டாக் பிரேஸ்வெல் அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் நியூசிலாந்து அணியின் ரசிகர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

இதே போன்று டிம் சவுத்திக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜக்கப் டஃபி அணியில் இடம் பெறுகிறார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்திலும், இரண்டாவது போட்டி ராய்ப்பூரிலும், மூன்றாவது போட்டியில் இந்தூரிலும் நடைபெறுகிறது.

இரு அணிகளும் வலுவானவை என்பதால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மும்பை இந்தியன்ஸ் அணியில் 12 ஆண்டுகள் நிறைவு’ – குடும்பத்தைப் போன்றது என ரோகித் சர்மா உருக்கம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு டாம் லாதம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரிலிருந்து முக்கிய பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான்? நியூசிலாந்து உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

இந்தியாவுடனான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:

டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், டக் பிரேஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் ஷிப்லர், மிட்செல் சான்ட் சோதி மற்றும் பிளேயர் டிக்னர்.

First published:

Tags: Cricket