• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கப்தில், மிட்செல் சிறப்பான ஆட்டம்- 164 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி

கப்தில், மிட்செல் சிறப்பான ஆட்டம்- 164 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி

இந்திய அணி

இந்திய அணி

இந்தியாவுக்கான எதிரானப் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக கேன் வில்லியம்சன் விலகியுள்ளதால் டிம் சௌத்தி தலைமையில் நியூசிலாந்து இந்தத் தொடரில் விளையாடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதனையடுத்து, நியூசிலாந்து அணியின் சார்பில் மார்டின் கப்தில், ரேர்ல் மிட்செல் களமிறங்கினர். மிட்செல் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வரின் பந்துவீச்சில் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, மார்க் சாப்மேன் களமிறங்கினார். கப்தில், சாப்மன் இணை இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவருரின் பார்டனர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மன் 50 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க மறுபுறம் கப்தில் அதிரடியாக ஆடினார்.

    42 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரிகளுடன் 70 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: