முகப்பு /செய்தி /விளையாட்டு / காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் 4 மாதங்களுக்கு ஓய்வு… சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிர்ச்சி

காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் 4 மாதங்களுக்கு ஓய்வு… சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிர்ச்சி

கைல் ஜேமிசன்

கைல் ஜேமிசன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் 4 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை சென்னை அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜேமிசனுக்கு முதுகில் மேஜரான காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் நியூசிலாந்து அணி தெரிவித்துள்ளது.மேலும் சிகிச்சைக்கு பின்னர் அவர் குறைந்தது 4 மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜேமிசன் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பது அவர் இடமபெற்றுள்ள சென்னை அணிக்கு முக்கிய இழப்பாக கருதப்படுகிறது. டி20 ஃபார்மேட்டிற்கான மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக கைல் ஜேமிசன் கருதப்படுகிறார். அவருக்கு மாற்று வீரராக ஏலத்தில் விலை போகாத வீரரரான கிறிஸ் ஜோர்டனை சென்னை அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று இலங்கை அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான தசுன் ஷனகாவை சென்னை அணியில் எடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Cricket, IPL 2023