முகப்பு /செய்தி /விளையாட்டு / இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

நியூசிலாந்து அணி (File)

நியூசிலாந்து அணி (File)

ஃபின் ஆலன், லாக்கி பெர்கூசன், க்ளென் பிலிப்ஸ் ஆகிய 3 பேரும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்பார்கள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல்வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தீ, டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. இவர்கள் அனைவரும், இலங்கை உடனான 2 ஆவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா புறப்பட்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட் கிறிஸ் சர்ச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியின் கடைசி நாள் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி டெஸ்டின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடுத்த டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 25 ஆம் தேதி ஆரம்பம் ஆகின்றன.

டாம் லாதம் தலைமையிலான அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் அவருடன் மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், சாட் பவுஸ், ஹென்றி சிப்லே, இஷ் சோதி, பிளெய்ர் டிக்னர், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஃபின் ஆலன், லாக்கி பெர்கூசன், க்ளென் பிலிப்ஸ் ஆகிய 3 பேரும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்பார்கள். இதனை முடித்துக் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவர்கள் இந்தியா புறப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக அடுத்த 2 போட்டிகளில் மார்க் சாம்ப்மென், ஹென்றி நிகோல்ஸ், பென் லிஸ்டர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 31 ஆம்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன.

First published:

Tags: Cricket