நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு... அரையிறுதிக்குள் நுழையும் அணி?

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய், ஜானி பயர்ஸ்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தனர்

நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு... அரையிறுதிக்குள் நுழையும் அணி?
நியூசிலாந்து
  • News18
  • Last Updated: July 3, 2019, 7:07 PM IST
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு 306 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜேசன் ராய், ஜானி பயர்ஸ்டோ சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ராய் 60 ரன்களுக்கும், ஜானி பயர்ஸ்டோ 106 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை எடுத்தது.





நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி, ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்சல் சாண்ட்னர், டிம் சவுதி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading