முகப்பு /செய்தி /விளையாட்டு / இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசி. வெற்றி பெற 285 ரன்கள் இலக்கு…

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசி. வெற்றி பெற 285 ரன்கள் இலக்கு…

நியூசிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 4ஆவது நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 257 ரன்கள் தேவைப்படுகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 9 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 92.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 355 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 87 ரன்களும் கேப்டன் கருணாரத்னே 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சவுத்தி 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 373 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 102 ரன்களும், லாதம் 67 ரன்களும் எடுத்தனர்.

2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 105.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் எடுத்தது. சீனியர் வீரர் ஏஞ்செலோ மேத்யூஸ் 115 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது. டெவோன் கான்வே 5 ரன்னில் வெளியேறியுள்ளார். டாம் லாதம் 11 ரன்னுடனும், கேன் வில்லியம்சன் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket