Home /News /sports /

INDvsNZ | சொற்ப ரன்களில் சுருண்ட இந்தியா... வலுவான நிலையில் நியூசிலாந்து

INDvsNZ | சொற்ப ரன்களில் சுருண்ட இந்தியா... வலுவான நிலையில் நியூசிலாந்து

INDvsNZ

INDvsNZ

Inida vs Newzealand | முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணியில் டாம் ப்ளண்டெல், டாம் லதாம் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். லதாம் 11 ரன்னிலும் ப்ளண்டெல் 30 ரன்னிலும் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். கேப்ட்ன வில்லியம்சன்னும், தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ராஸ் டெய்லரும் இணைந்து நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

    Also Read : சச்சின், தோனியை அருகில் உட்கார வைத்த திறமையான வேலைக்காரர் பாஸ்கரன்..! யார் இவர்..?
     டெஸ்டில் தனது 32வது சதத்தை பதிவுசெய்த கேன்வில்லியம்சன் 89 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இறுதியாக 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும் ஷமி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.


    Published by:Vijay R
    First published:

    Tags: Asia cup cricket, Ind vs NZ

    அடுத்த செய்தி