டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் தனது 26 ஆவது சதத்தை அடித்தார். 132 ரன்களை 2 ஆவது இன்னிங்ஸில் எடுத்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 7,787 ரன்களை குவித்துள்ளார்.
இதன் மூலம் அந்நாட்டு அணியின் ராஸ் டெய்லருடைய சாதனையை வில்லியம்சன் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ராஸ் டெய்லர் மொத்தம் 7,683 ரன்களை எடுத்திருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து அணியில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் வில்லியம்சன் ஏற்படுத்தியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 19 சதங்களுடன் ராஸ் டெய்லர் உள்ளார். வில்லியம்சனின் சதங்களில் 5 இரட்டை சதங்கள் அடங்கும்.
டெஸ்ட் கெரியரில் 9 முறை 150 ரன்களை வில்லியம்சன் தாண்டியுள்ளார். 59 முறை 50 ரன்களை கடந்திருக்கிறார். 32 வயதாகும் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 53.33 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். உள்ளூரில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் 3930 ரன்களை குவித்துள்ளார். உள்ளூர் டெஸ்ட்களில் அவரது சராசரி 63.58 ரன்கள் ஆகும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட்போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில், நாளை கடைசி நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 210 ரன்கள் தேவைப்படுகிறது. நேற்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்களை எடுததிருந்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket