Home /News /sports /

அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு: நியூசிலாந்துக்கு மேலும் அதிர்ச்சி

அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு: நியூசிலாந்துக்கு மேலும் அதிர்ச்சி

கோலின் டி கிராண்ட்ஹோம்

கோலின் டி கிராண்ட்ஹோம்

நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது நியூசிலாந்துக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ட்ரெண்ட் போல்ட் தன்னை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டாம் என்றார், இப்போது கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வே அறிவித்து விட்டார்.

தன் ஓய்வுக்குக்கான காரணங்களாக காயங்கள் மற்றும் தேசிய அணியில் அவரவர் இடங்களுக்கான போட்டி உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளார். தனியார் லீகில் இவர் ஜமைக்கா தலவாஸ், நாகேந்திர நாகாஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி, செயிண்ட் லூசியா ஜூக்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆடியுள்ளார். இவருக்கு வயது 36.

ஆனால் கொலின் இந்தக் காரணங்களைக் கூறினாலும் கடந்த வாரம்தான் ஆஸ்திரேலியாவின் தனியார் லீகான பிக்பாஷ் டி20 லீகில் கொலின் டி கிராண்ட்ஹோமை அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் வாங்கியது. நியூசிலாந்துக்காக  3 வடிவங்களிலும் 115 போட்டிகளில் ஆடியிருப்பார் கொலின், 10 ஆண்டுகள் ஆடியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனபோது கொலின் நியூசிலாந்து அணியில் ஆடினார்.

2019 உலகக்கோப்பையின் தோல்வியிலும் இவர் இருந்தார். சர்வதேச போட்டியை ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2012-ல் முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். கடந்த ஜூனில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், 8 அரைசதங்கள், 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.   2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரது அதிகபட்சம்.

45 ஒருநாள் போட்டிகளில் 742 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் 106, 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 41 டி20 போட்டிகளில் 505 ரன்களை எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 138. 12 டி20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இவர் 1986-ல் ஜிம்பாப்வேயின் ஹராரேயில் பிறந்தவர் ஜிம்பாப்வேகாரர், ஆனால் 2006-ல் நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு குடிபெயர்கிறார். 2003-04 யு-19 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு ஆடினார். தனியார் கிரிக்கெட்டுக்கு 2வது பலி கொலின் டி கிராண்ட்ஹோம், முதலில் ட்ரெண்ட் போல்ட், மொத்தத்தில் ட்ரெண்ட் போல்ட் செட் செய்த ட்ரெண்ட் இது.
Published by:Saravana Siddharth
First published:

Tags: Cricket, Sports

அடுத்த செய்தி