முகப்பு /செய்தி /விளையாட்டு / டெஸ்ட் போட்டிகளில் தோனியின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்… ரசிகர்கள் வியப்பு

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்… ரசிகர்கள் வியப்பு

டிம் சவுத்தீ - தோனி

டிம் சவுத்தீ - தோனி

பவுலராக இருக்கும் ஒருவர் இத்தனை சிக்சர்களை அடித்துள்ளாரா என்று கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெஸ்ட் போட்டிகளில் தோனியின் சாதனையை நியூசிலாந்து அணியின் கேப்டனும் பந்து வீச்சாளருமான டிம் சவுத்தீ சமன் செய்துள்ளார். இதுதொடர்பான தகவல்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டிம் சவுத்தீ. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இவர் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தற்போது 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸின்போது, இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய பந்தை பேட்டிங் செய்து கொண்டிருந்த டிம் சவுத்தீ சிக்சருக்கு பறக்க விட்டார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தனது 78 ஆவது சிக்சரை சவுத்தீ பதிவு செய்தார். இதே எண்ணிக்கையிலான சிக்சர்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். இந்நிலையில், டிம் சவுத்தீ தோனியின் சாதனையை இன்று சமன் செய்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். பவுலராக இருக்கும் ஒருவர் இத்தனை சிக்சர்களை அடித்துள்ளாரா என்று கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த டாப் 15 ஆட்டக்காரர்கள் பட்டியலில் சவுத்தீ இணைந்துள்ளார். இன்னும் 6 சிக்சர்களை அவர் அடித்தால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை முறியடிப்பார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் சவுத்தீ ஏற்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

First published:

Tags: Cricket, Dhoni