EXCLUSIVE சச்சினுக்கு அட்வைஸ் கொடுத்த சென்னை ஓட்டல் ஊழியர் இவர்தான்!

  • Share this:
    நல்ல அறிவுரையை யார் சொன்னாலும் ஏற்கவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சச்சின் டெண்டுல்கர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.   

    2001-ம் ஆண்டு சென்னை டெஸ்ட் தொடரின்போது தாஜ் கோரமண்டல் ஓட்டலில் தங்கியிருந்தபோது சர்வர் ஒருவர் கூறிய ஆலோசனை தன் ஆட்டத்தை மெருகேற்ற உதவியதாக கூறியுள்ளார்.

    முழங்கையை பாதுகாக்கும் Armguard- டிசைனில் தவறு இருந்ததை முன்பே உணர்ந்திருந்ததாகவும், அதுவரை யாரிடமும் அது பற்றி விவாதிக்காத நிலையில் சர்வர் கூறிய ஆலோசனையால் வியப்புற்று, அதை சரி செய்ததாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், தனக்கு அறிவுரை வழங்கிய சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரை கண்டுபிடித்து தருமாறு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரை நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கண்டுபிடித்துள்ளது.

    பெரம்பூரைச்சேர்ந்த குருபிரசாத் உடன் நெகிழ்ச்சி சந்திப்பு

    VIDEO:
    Published by:Yuvaraj V
    First published: