பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து அணி! தொடரையும் வென்று வரலாற்று சாதனை...

#NewZealand Win Abu Dhabi Test to Clinch Historic Series | ஆசிய மண்ணில் நியூசிலாந்து அணி வெல்லும் 5-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். #PAKvNZ #BLACKCAPS

Murugesan L | news18
Updated: December 7, 2018, 6:51 PM IST
பாகிஸ்தானை பந்தாடிய நியூசிலாந்து அணி! தொடரையும் வென்று வரலாற்று சாதனை...
பாகிஸ்தான் தொடரை வென்றது நியூசிலாந்து அணி (BLACKCAPS)
Murugesan L | news18
Updated: December 7, 2018, 6:51 PM IST
அபுதாபியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணியை 123 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 274 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில், நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் கேன் வில்லியம்சன் (139), ஹென்றி நிக்கோல்ஸ் (126) ஆகியோரின் அபார சதத்தால், 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Loading...
இதனால், கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்கியது. வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலும் கலக்கிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தது. பாபர் அசாம் மட்டும் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

New Zealand Beat Pakistan
பாகிஸ்தான் வீரரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் (BLACKCAPS)


இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

New Zealand Champion
பாகிஸ்தான் தொடரை வென்றது நியூசிலாந்து அணி (BLACKCAPS)


ஆசிய மண்ணில் நியூசிலாந்து வெல்லும் 5-வது டெஸ்ட் தொடர் இதுவாகும். மேலும், 1969-ம் ஆண்டிற்குப்பின், வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கரும்படை.

Also Watch...

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்