Home /News /sports /

NZ vs SA 2nd test; எல்கர்-எர்வீ சாதனை தொடக்கம்: 2வது டெஸ்ட்டில் எழுச்சி கண்ட தென் ஆப்பிரிக்கா

NZ vs SA 2nd test; எல்கர்-எர்வீ சாதனை தொடக்கம்: 2வது டெஸ்ட்டில் எழுச்சி கண்ட தென் ஆப்பிரிக்கா

சதம் கண்ட தென் ஆப்பிர்க்கா தொடக்க வீரர் சாரெல் எர்வீ.

சதம் கண்ட தென் ஆப்பிர்க்கா தொடக்க வீரர் சாரெல் எர்வீ.

கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா, முதல்நாள் ஆட்ட முடிவில் தன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.

    கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா, முதல்நாள் ஆட்ட முடிவில் தன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆட்ட நேர முடிவில் வாண்டர் டுசன் 13 ரன்களுடனும் தெம்பா பவுமா 13 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி சொதப்பிய சாரெல் எர்வீ இந்த டெஸ்ட்டில் சதம் கண்டார், அவர் 293 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார். 2வது டெஸ்ட்டிலேயே சதம் கண்டார். 2020 டிசம்பருக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த தொடக்க ஜோடி ரன்களாக 111 ரன்கள் சேர்க்கப்பட்டது. எல்கர் தன் பாணியில் நின்று 41 ரன்கள் எடுத்தார்.

    டிம் சவுதி மிகப்பிரமாதமாக ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வைடு ஆப் த கிரீசிலிருந்து மிக அழகாகப் பந்தை உள்ளே ஸ்விங் செய்தார். எல்கர் முடிந்தவரை ஸ்டம்பை கவர் செய்யும் ஆஃப் ஸ்டம்ப் மேல் பகுதியை தட்டி பவுல்டு ஆவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்கர் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், அது இந்த பிட்சில் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் முதல் டெஸ்ட்டில் 95 மற்றும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு தைரியமாக டாஸ் வென்று அதுவும் இந்த ஊரில் பேட் செய்ய முடிவெடுத்தது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

    பிட்ச் முதல் மேட்சில் இருந்தது போல் இல்லை, கொஞ்சம் புற்கள் குறைவுதான், அதனால் நியூசிலாந்தின் வேகப்பந்து கூட்டணிக்கு ஸ்விங் ஆகவில்லை. ரன் விகிதம் ஒரு ஓவருக்கு மூன்று கீழ் இருந்தது, நியூசிலாந்து 90 ஓவர்களில் 31 மெய்டன்களை வீசியது. அழுத்தம் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா சமாளிக்க வழிகளைக் கண்டறிந்தது.

    எர்வீ மிகவும் அமைதியான முறையில் தொடங்கினார். அவர் சந்தித்த முதல் 25 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார், அதற்கு முன்பு சவுதியின் இன்ஸ்விங் யார்க்கரில் லெக் ஸ்டம்பை ஏறக்குறைய இழந்திருப்பார். அவரது முதல் உறுதியான ஷாட் கைல் ஜேமிசனின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் ஆடிய ஒரு பஞ்ச் ஆகும். 17 ரன்களில் எல்கருடன் சமன் செய்ய அவருக்கு 16 வது ஓவர் ஆனது. ஆனால் அவர் கேப்டனை முந்தியதும், அவர் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். அவர் தொடர்ச்சியான டிரைவ்களை ஆடினார். கொலின் டி கிராண்ட்ஹோம் பந்தில் ஒரு ஷாட் மூலம் 50 ரன்களை எடுத்தார், அது 4 ரன்களுக்கு வைட் ஆஃப் பாயிண்ட் சென்றது. தென்னாப்பிரிக்கா 80 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் லஞ்சுக்குச் சென்றது இந்த மைதானத்தில் 11 டெஸ்டில் பேட்டிங் செய்த அணி விக்கெட் இழப்பின்றி மதிய உணவுக்கு சென்றது இது இரண்டாவது முறையாகும் என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம்.

    எர்வி சவுதி பந்தை மிட் ஆஃபில் 4 ரன்களுக்கு அடித்த போது, 2004 ஆம் ஆண்டில் கிரேம் ஸ்மித் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோருக்குப் பிறகு, நியூசிலாந்தில் ஒரு டெஸ்டின் முதல் விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்த ஜோடியானார்கள் எர்வி-எல்கர்.

    எல்கர் பவுல்டு ஆன பிறகு நோட்டீஸ் பீரியடில் இருக்கும் மார்க்ரம் 42 ரன்களில் வெளியேறினார். கடைசியாக எர்வியும் 108 ரன்களில் வெளியேறினார், தென் ஆப்பிரிக்கா 238/3 ஆக உள்ளது. நியுசிலாந்து தரப்பில் சவுதி, ஹென்றி, வாக்னர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நாளை சனிக்கிழமை 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: New Zealand, South Africa, Test cricket

    அடுத்த செய்தி