முகப்பு /செய்தி /விளையாட்டு / 10 பவுண்டரி 7 சிக்ஸ், 82 பந்துகளில் 127; கடைசி ஓவரில் 24 ரன்கள் காட்டடி- அயர்லாந்தின் இதயத்தை நொறுக்கிய பிரேஸ்வெல்

10 பவுண்டரி 7 சிக்ஸ், 82 பந்துகளில் 127; கடைசி ஓவரில் 24 ரன்கள் காட்டடி- அயர்லாந்தின் இதயத்தை நொறுக்கிய பிரேஸ்வெல்

காட்டடி சதத்தில் 300 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டிய நியூசி. வீரர் பிரேஸ்வெல்

காட்டடி சதத்தில் 300 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டிய நியூசி. வீரர் பிரேஸ்வெல்

அயர்லாந்து மலஹைடில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து முதலில் பேட் செய்து ஹாரி டெக்டரின் (113) அபார சதத்தினால் 300 ரன்கள் எடுத்தது, ஆனால் நியூசிலாந்து அணி இலக்கை விரட்டி கடைசி பந்துக்கு முதல் பந்தில் காட்டடி சத நாயகன் பிரேஸ்வெல் அடித்த சிக்சர் மூலம் 305/9 அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அயர்லாந்து மலஹைடில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து முதலில் பேட் செய்து ஹாரி டெக்டரின் (113) அபார சதத்தினால் 300 ரன்கள் எடுத்தது, ஆனால் நியூசிலாந்து அணி இலக்கை விரட்டி கடைசி பந்துக்கு முதல் பந்தில் காட்டடி சத நாயகன் பிரேஸ்வெல் அடித்த சிக்சர் மூலம் 305/9 அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து அணி இலக்கை விரட்டும் போது 19/2, 57/3, 83/4, 120/5, 153/6 என்று ஆகி பிறகு 42.4 ஓவர்களில் 217/8 தோல்வி முகம் காட்டிய போது பிரேஸ்வெல் அசகாய சூரனாக நின்று அடுத்த 44 பந்துகளில் 88 ரன்கள் விளாசி அபார வெற்றி பெறச் செய்தார், அயர்லாந்து வீரர்கள் இந்தத் தோல்வியினால் கடும் ஏமஆற்றமடைந்தனர், பிரேஸ்வெல் 51 பந்துகளில் 50 ரன்கள் பிறகு அடுத்த 23 பந்துகளில் இன்னொர50 ரன்களை விளாசி 74 பந்துகளில் சதம் கண்டு கடைசியில் 8 பந்துகளில் மேலும் 27 ரன்களை விளாசி 82 பந்துகளில் 10 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 127 ரன்கள் விளாசி வெற்றி பெறச் செய்தார்.

பிரேஸ்வெல், அயர்லாந்து பவுலர் யங் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்ததன் மூலம் 1987 உலகக்கோப்பை சாதனையாக இங்கிலாந்து செய்த சாதனையை பிரேஸ்வெல் உடைத்தார். கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார் பிரேஸ்வெல், பிறகு லெக் திசையில் ஒரு சிக்ஸ். மீண்டும் ஒரு புல்ஷாட்டில் பவுண்டரி.  கடைசி பந்தை லாங்  ஆன் திசையில் காணாமல் அடித்தார் சிக்சருக்கு.

இந்த சாதனை விரட்டலில் பிரேஸ்வெல் இஷ் சோதியுடன் (25) 7வது விக்கெட்டுக்கு 61 ரன்களையும் லாக்கி பெர்கூசன் (8) உடன் 9வது விக்கெட்டுக்காக 64 ரன்களையும் கூட்டிணைந்து விளாசினார் பிரேஸ்வெல்.

இந்த வெற்றியினால் அயர்லாந்தின் இதயம் நொறுங்கியது, குறிப்பாக ஹாரி டெக்டர் மிகப்பிரமாதமாக ஆடி 109 பந்துகளில் சதம் கண்டார். அதுவும் நியூசிலாந்து பவுலர் பிளேர் டிக்னரை 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசி சதம் கண்டார். 113 ரன்களை டெக்டர் எடுத்ததால் அயர்லாந்து 300 ரன்களை எட்டியது. இவருடன் கர்ட்டிஸ் கேம்பர் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 43 ரன்களையும் மெக்பிரைன் 39 ரன்களையும் சிறு பங்களிப்புகளாக டக்கர் 26, ஜார்ஜ் டாக்ரெல் 18 கடைசியில் சிமி சிங் என்பவர் இறங்கி 19 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 30 என்று அடிக்க அயர்லாந்து 300 ரன்கள் என்ற நல்ல இலக்கை நிர்ணயித்தது.

நியூசிலாந்து விரட்டலின் போது மார்டின் கப்டில் சிலபல டைட்டான அயர்லாந்து பந்து வீச்சில் 61 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 51 எடுத்து மீடியம் பாஸ்ட் பவுலர் கர்ட்டிஸ் கேம்ஃபரிடம் (3/43) வீழ்ந்தார். முன்னதாக நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 6, வில் யங் 1, டாம் லேதம் 23,  நிகோலஸ் 7, என்று ஆட்டமிழக்க 22 ஓவர்களில்120/5 என்று தோல்வி முகம் காட்டியது.

நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 53 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இவர் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 153/6. அதன் பிறகுதான் பிரேஸ்வெல் ஆட்டம் உக்கிரமானது, இஷ் சோதியையும் லாக்கி பெர்கூசனையும் வைத்துக் கொண்டு இலக்கை கடைசி பந்துக்கு முதல் பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெறச் செய்தார். ஆட்ட நாயகன் பிரேஸ்வெல்.

First published:

Tags: Ireland, New Zealand, ODI