ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா- நியூசிலாந்து இடையேன முதல் டி20 போட்டி ரத்து

இந்தியா- நியூசிலாந்து இடையேன முதல் டி20 போட்டி ரத்து

 வெலிங்டன் மைதானம்

வெலிங்டன் மைதானம்

Ind vs NZ | தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும் , ஒருநாள் ஆட்டத்துக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில்  இன்று மதியம் 12 மணிக்குதொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா -நியூசிலாந்து முதல் டி20 போட்டி ரத்து செய்யப்படுவ்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்த வெளிநாட்டு அணிகள் செய்யும் ரகசியத்தை போட்டுடைத் ஜான்டி ரோட்ஸ்

  டி20 தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:

  ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்) இஷான் கிஷன், சுப்மன் கில், சூர்ய குமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, India vs New Zealand