ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

புதிய கோச் மெக்கல்லம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்

புதிய கோச் மெக்கல்லம், புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்

இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் டெஸ்ட் லார்ட்ஸ்

இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் டெஸ்ட் லார்ட்ஸ்

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் சற்று முன் தொடங்கியது, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் சற்று முன் தொடங்கியது, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.

  ஜோ ரூட் தலைமையின் கீழ் ஆஷஸ் தொடரை 4-1 என்று தோற்றபிறகும், மே.இ.தீவுகளிடம் 1-0 என்று டெஸ்ட் தொடரை இழந்த பின்னும் ரூட் தலைமைப்பொறுப்பைத் துறந்தார், இதனையடுத்து ஆக்ரோஷ ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட ஆக்ரோஷ நியூசிலாந்து முன்னாள் வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்துக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இங்கிலாந்து வெற்றி பெற்றேயாக வேண்டும், நியூசிலாந்துக்கும் அப்படித்தான்.

  இங்கிலாந்து லெவன்: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் (வி.கீ), மேத்யூ பாட்ஸ், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

  நியூசிலாந்து லெவன்: டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன், டெவன் கான்வே, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் சவுதி, அஜாஸ் படேல், ட்ரெண்ட் போல்ட்.

  சற்று முன் நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங், ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி பேர்ஸ்டோவின் அசத்தல் கேட்சுக்கு 1 ரன்னில் வெளியேறினார். டாம் லேதமும், கேன் வில்லியம்சனும் களத்தில் உள்ளனர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: England test, New Zealand