Home /News /sports /

கடைசி விக்கெட்டை வீழ்த்தி சாதனையுடன் டெய்லர் ஓய்வு- வங்கதேசம் பெரிய இன்னிங்ஸ் தோல்வி- நியூசிலாந்து வெற்றி

கடைசி விக்கெட்டை வீழ்த்தி சாதனையுடன் டெய்லர் ஓய்வு- வங்கதேசம் பெரிய இன்னிங்ஸ் தோல்வி- நியூசிலாந்து வெற்றி

ராஸ் டெய்லர் கடைசி விக்கெட்டை வீழ்த்த நியூசி. இன்னிங்ஸ் வெற்றி.

ராஸ் டெய்லர் கடைசி விக்கெட்டை வீழ்த்த நியூசி. இன்னிங்ஸ் வெற்றி.

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்டுடன் ஓய்வு பெற்ற ராஸ் டெய்லருக்கு தன் கடைசி டெஸ்ட்டை மறக்க முடியா வண்ணம் கடைசி விக்கெட்டான இபாதத் ஹுசைன் விக்கெட்டை வீழ்த்தினார். எப்படி இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வெற்றி ரன்களை ராஸ் டெய்லர் அடித்து உலக டெஸ்ட் சாம்பியன்களானார்களோ, அதே போல், இந்த முறையும் கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஒரு அருமையான பிரியாவிடை என்ற வரப்பிரசாதத்தை பெற்றார் ராஸ் டெய்லர். 

மேலும் படிக்கவும் ...
    கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்தது. 2வது டெஸ்ட் சுருக்கமான ஸ்கோர்: நியூசிலாந்து 521/6 டிக்ளேர் (லேதம் 252, கான்வே 109, பிளண்டெல் 57 நாட் அவுட், ஷோரிபுல் 2/79))  வங்கதேசம் 126 ஆல் அவுட் யாரிச் 55, ட்ரெண்ட் போல்ட் 5/43, சவுதி 3-28, ஜேமிசன் 2-32, மற்றும் 278 ஆல் அவுட் - லிட்டன் தாஸ் 102, மோமினுல் 37, ஜேமிசன் 4-82, வாக்னர் 3/77).

    கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட்டுடன் ஓய்வு பெற்ற ராஸ் டெய்லருக்கு தன் கடைசி டெஸ்ட்டை மறக்க முடியா வண்ணம் கடைசி விக்கெட்டான இபாதத் ஹுசைன் விக்கெட்டை வீழ்த்தினார். எப்படி இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வெற்றி ரன்களை ராஸ் டெய்லர் அடித்து உலக டெஸ்ட் சாம்பியன்களானார்களோ, அதே போல், இந்த முறையும் கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஒரு அருமையான பிரியாவிடை என்ற வரப்பிரசாதத்தை பெற்றார் ராஸ் டெய்லர்.

    ராஸ் டெய்லர் பிரியாவிடை


    முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது, அதில் கடுப்பாகிப் போன நியூசிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் முதலிலிருந்தே காய்ச்சி எடுத்தது, பவுலிங்கில் சொருகியது. ஹாக்லி ஓவல் மைதானத்தில் இன்று ராஸ் டெய்லரின் குடும்பத்தினர் முன்னிலையில் அவர் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். டாம் லேதமின் 6வது கேட்ச் ஆக இது அமைந்தது. பாலோ ஆன் ஆடிய வங்கதேசம் 278 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தாலும் தலைகுனிவு அல்ல, பிரமாதமாக ஆடினர்.

    வெளுத்து வாங்கிய லிட்டன் தாஸின் சதம்; ஜேமிசனின் ஒரே ஓவரில் 17 ரன்கள் விளாசல்:

    இரண்டாவது இன்னிங்ஸில் லிட்டன் தாஸ் தன் முதல் பவுண்டரியை 46வதுபந்தில் தான் அடித்தார். பிறகு 64 பந்துகளில் 33 ரன்களை விளாசியிருந்தார். எப்படியெனில் இந்தியா பயப்படும், தொடை நடுங்கும் 7 அடி உயர கைலி ஜேமிசனை லிட்டன் தாஸ் ஒரே ஓவரில் 17 ரன்கள் விளாசித்தள்ளினார். 2 பவுண்டரி மற்றும் ஒரு அப்பர் கட் தேர்ட் மேன் சிக்ஸ். 2 நான்கு ரன்களும் புல் ஷாட்டில் வந்தது. இத்தனைக்கும் ஆன்சைட் பீல்டிங் நெரிசலாக அமைக்கப்பட்டிருந்தது. இதோடு விட்டாரா, ட்ரெண்ட் போல்ட்டை 4 பவுண்டரிகள் விளாசினார், இது மிகவும் ருசிகரமான ஷாட்கள். ஆனால் இந்த முறை மிட் ஆஃப், கவர், நேர் திசை என்று பவுண்டரிகள் அருமையான கிரிக்கெட்டிங் ஷாட்களில் வந்தது.

    114 பந்துகளில் 102 ரன்கள் விளாசிய லிட்டன் தாஸ்.


    இப்படியாக 12 பந்துகளில் லிட்டன் தாஸ் 35 ரன்களை விளாசினார். இதனையடுத்து 21 ஓவர்களில் 6வது விக்கெட்டுக்காக 101 ரன்கள் கூட்டணி கண்டனர், லிட்டன் தாஸும் நூருல் ஹசனும் (36). நுருல் ஒரு முனையில் தாக்குப் பிடிக்க வேண்டும் ஆனால் அவர் மிட் ஆஃபில் வாக்னரின் டைவிங் கேட்சுக்கு மிட்செல் பந்தில் ஆட்டமிழக்க அடுத்த 49 ரன்களுக்கு வங்கதேச அணியே ஆல் அவுட் ஆனது. மெஹிதி ஹசன் மிராஸ்தான் கொஞ்சம் நிற்கக் கூடியவர் அவர் கைல் ஜேமிசனிடம் வீழ்ந்தார்.

    இதையும் படிங்க: தோனியின் அட்வைஸை ரிஷப் பண்ட்டிற்கு கூறுகிறீர்களே, நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா கோலி?

    ஆனால் லிட்டன் தாஸ் வெளுத்து வாங்கினார், வாக்னரை ஒரு புல் ஷாட், கவரில் ஒரு பந்தை தூக்கி அடிக்க வாக்னர் கடுப்பாகி அவரை நோக்கி சில வசைகளை பொழிந்தார். புல் ஷாட்டில் வாக்னரை பவுண்டரிக்கு விரட்டி தன் 2வது டெஸ்ட் சதத்தை எடுத்து 114 பந்துகளில் 102 ரன்களை 14 பவுண்டரி 1 சிக்சருடன் வெளுத்து கட்டி கைல் ஜேமிசன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.

    முன்னதாக நியூசிலாந்து டாப் ஆர்டரில் ஷத்மன் இஸ்லாம் -21, முகமது நயீம் 24, நஜ்முல் ஷாண்ட்டோ 29 என்று தொடங்கி பிறகு ஆட்டமிழந்தனர். கேப்டன் மோமினுல் ஹக் 37 ரன்களிலும் யாசிர் அலி 2 ரன்களிலும் ஆட்டமிழக்க வங்கதேசம் 128/5 என்று சரிவு கண்டு பிறகு லிட்டன் தாஸின் காட்டடி தர்பாரில் 278 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    2வது இன்னிங்சில் ஜேம்சன் 4 விக்கெட், வாக்னர் 3 விக்கெட். நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்களில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. ஆட்ட நாயகன் கேப்டன் டாம் லேதம், தொடர் நாயகன் டெவன் கான்வே, இரண்டு டெஸ்ட்களிலும் சதம் விளாசினார் கான்வே.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bangladesh, Cricket, New Zealand, Test cricket

    அடுத்த செய்தி