Home /News /sports /

லேதம் 252 ரன்கள், கான்வே 109, வங்கதேசத்தை 126 ரன்களுக்கு தட்டித்தூக்கிய நியூசிலாந்து

லேதம் 252 ரன்கள், கான்வே 109, வங்கதேசத்தை 126 ரன்களுக்கு தட்டித்தூக்கிய நியூசிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக். போல்ட் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக். போல்ட் சாதனை

ட்ரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4வது நியூசிலாந்து பவுலர் ஆனார், சர் ரிச்சர் ஹாட்லி, டேனியல் வெட்டோரி, டிம் சவுதிக்குப் பிறகு 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் ஆனார் போல்ட். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் 5வது வீரராக 300 விக்கெட் மைல்கல்லை எட்டினார் போல்ட்.

மேலும் படிக்கவும் ...
    கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 521 ரன்கள் குவித்ததோடு வங்கதேசத்தை 126 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

    நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் 252 ரன்களை அவர் மட்டுமே எடுக்கையில் ஒட்டுமொத்த வங்கதேசமும் சேர்ந்து அதில் பாதி ஸ்கோரான 126 ரன்களையே எட்ட முடிந்தது, காரணம் ட்ரெண்ட் போல்ட் 300வது விக்கெட்டைக் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் படு கேவலமாக ஆல் அவுட் ஆகும் நிலைமையில் 27/5 என்று இருந்தது. ஆனால் வங்கதேசத்தின் யாசிர் அலி 55 ரன்களையும் நூருல் ஹசன் 41 ரன்களையும் சேர்த்து 6வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர். ட்ரெண்ட் போல்ட் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, ஜேமிசன் 2, டிம் சவுதி 3 என்று வங்கதேசத்தை அடித்து துவைத்தனர்.

    395 ரன்கள் பின்னிலியில் இருக்கும் வங்கதேசத்திற்கு பாலோ ஆன் கொடுப்பார்களா அல்லது ராஸ் டெய்லர் கடைசி டெஸ்ட் என்பதால் இன்னொரு பேட்டிங் வாய்ப்பை அவருக்கு வழங்க நியூசிலாந்து மீண்டும் பேட் செய்யுமா என்பது நாளை 3ம் நாள் ஆட்டத்தில்தான் தெரியும்.

    டாம் லேதம் 252.


    ட்ரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4வது நியூசிலாந்து பவுலர் ஆனார், சர் ரிச்சர் ஹாட்லி, டேனியல் வெட்டோரி, டிம் சவுதிக்குப் பிறகு 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் ஆனார் போல்ட். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் 5வது வீரராக 300 விக்கெட் மைல்கல்லை எட்டினார் போல்ட்.

    டாம் லேதம் 252 ரன்களை விளாசியதில் 34 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்தார். கேப்டனாக தொடக்கத்தில் இறங்கி அதிகபட்ச ஸ்கோர் சாதனையை நிகழ்த்தினார். 1968-ல் கிரகாம் டவுலிங் என்ற வீரர் இந்தியாவுக்கு எதிராக 239 ரன்களை எடுத்த பிறகு டாம் லேதம்தான். லேதம் முதல் விக்கெட்டுக்காக 148 ரன்களையும் பிறகு டெவன் கான்வே (109) உடன் சேர்ந்து 215 ரன்களையும் சேர்த்தனர். டெவன் கான்வே தன் 5வது டெஸ்ட் போட்டியில் 3வது சதம் எடுத்துள்ளார். 521/6 என்று டிக்ளேர் செய்தது.

    போல்ட், சவுதியிடம் மடிந்த வங்கதேசம்:

    இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் நிச்சயம் நியூசிலாந்து பேட் செய்த பிட்ச் போல் இல்லையே இது, வேற பிட்ச்ல போட்டுட்டாங்களா என்ற சந்தேகம் ஏற்பட ஆடியது. ஷத்மன் இஸ்லாம், நஜ்முல் ஹுசைன் சொற்ப ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டிடம் காலியாயினர். அறிமுக பேட்டர் முகமது நயீம் 5 பந்தில் டக் அவுட் ஆனார். சவுதியிடம் பவுல்டு ஆகி வெளியேறினார். கேப்டன் மோமினுல் ஹக் சவுதியின் ஃபுல் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். லிட்டன் தாஸ் 8 ரன்களில் போல்ட்டிடம் இன்சைடு எட்ஜ் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    அதன் பிறகு 60 ரன்கள் கூட்டணி. ஆனால் நுருல் சவுதி பந்தில் எல்.பி.ஆனார். இவர் 62 பந்தில் 41. மெஹதி ஹசன் மிராஸ், போல்ட்டின் 300வது விக்கெட்டாக ரவுண்ட் த விக்கெட்டில் ஸ்டம்புகளை இழந்தார். டஸ்கின் அகமட் விக்கெட்டை வீழ்த்தி கைல் ஜேமிசன் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார். யாசிர் ரன் சேர்க்கும் முனைப்பில் ஜேமிசனிடம் வெளியேற கடைசி விக்கெட்டை போல்ட் காலி செய்தார், வங்கதேசன் 126 ஆல் அவுட்.

    இன்று காலை டெவன் கான்வே 99 நாட் அவுட் என்று தொடங்கி ப்ளே என்ற முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சதம் கண்டார். மெகதி ஹசனை நேர் சிக்ஸ் விளாசினார். இது போக 12 பவுண்டரிகளையும் விளாசினார் கான்வே. கடைசியில் மெஹிதி ஹசனின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ராஸ் டெய்லர் கடைசி டெஸ்ட் என்பதால் வங்கதேச வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். இவர் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் பிளெண்டல் 57 ரன்களை 60 பந்துகளில் விளாசினார். கேப்டன் லேதம் விக்கெட்டை கேப்டன் மோமினுல் ஹக் வீழ்த்தினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Bangladesh, New Zealand, Test cricket

    அடுத்த செய்தி