ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஓபனிங் முதலே அதிரடி காட்டிய நியூசிலாந்து... ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு

ஓபனிங் முதலே அதிரடி காட்டிய நியூசிலாந்து... ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு

அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வே

அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வே

அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் டெவோன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiasydneysydneysydneysydneysydney

  நியூசிலாந்து அணி சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு 201ரன்கள் இலக்காக  நிர்ணயத்துள்ளது.

  8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 12 போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. குரூப் 1 முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.  சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

  அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடியில் பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனையடுத்து அடுத்து வில்லியம்சன் 23 ரன்களும் , பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

  Also Read: கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்!

  அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் டெவோன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 200 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹாசில்வுட் 2விக்கெட்டை வீழ்த்தினார்.201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Australia, New Zealand, Sydney, T20 World Cup