#NZvINDFinalT20: நியூசி. அதிரடி.. இந்தியாவுக்கு 213 ரன்கள் இலக்கு!

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

news18
Updated: February 10, 2019, 2:42 PM IST
#NZvINDFinalT20: நியூசி. அதிரடி.. இந்தியாவுக்கு 213 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணி
news18
Updated: February 10, 2019, 2:42 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது.

விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இந்திய அணி வீரர்கள்(Photo-BCCI twitter)


இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற, 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

(Photo-BCCI twitter)


இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (பிப்.10) ஹேமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
Loading...
அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்பெர்ட் மற்றும் கொலின் முன்ரோ அதிரடியாக விளையாடினர். இந்திய பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.

டிம் செய்பெர்ட் 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசியும் கொலின் முன்ரோ 40 பந்துகளில் 76 ரன்கள் விளாசியும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்களில் கலீல் அகமதுவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கடைசி கட்டத்தில் கொலின் டி கிராண்ட்கோம் (30), டேரில் மிட்செல் (19) ஆகிய இருவரும் தங்கது பங்கிற்கு இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்க, இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கலீல் அகமது, புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Also see:

 
First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...