கோலின் முன்ரோ அதிரடி! 14 ஓவர்களில் 140 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

கோலின் முன்ரோ அதிரடி! 14 ஓவர்களில் 140 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணி
  • News18
  • Last Updated: February 10, 2019, 1:38 PM IST
  • Share this:
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 14 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து, விளையாடி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 விதமான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது.

இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.


இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (பிப்.10) ஹேமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சில் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்பெர்ட் மற்றும் கொலின் முன்ரோ அதிரடியாக விளையாடினர். இந்திய பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது.டிம் செய்பெர்ட் 25 பந்துகளில் தலா 3 சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசி, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 14 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

Also see:

 
First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்