மீண்டும் கான்வே அபாரம்: பிராட் சாதனை; இங்கிலாந்தை திணறடிக்கும் நியூசிலாந்து

டெவன் கான்வே. | கோப்புப் படம்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 303 ரன்களை எடுக்க நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த டெவன் கான்வே நேற்று 80 ரன்கள் எடுத்து ஹை பிளிக் ஆடி டீப் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆகி பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். தன் 3வது டெஸ்ட் போட்டியில் ஆடும் வில் யங் 11 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார். இவர் டேன் லாரன்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் கடைசியில் ஒரு முனையில் விக்கெட்டுகள் இல்லாததால் அடித்து ஆடிய டேன் லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்து ஒருமுனையில் தேங்கிப் போனார்.

    டெவன் கான்வே 22 ரன்களில் இருந்த போது ஜாக் கிராலி பிடித்த கேட்ச் தரையில் பட்டு வந்ததாக நடுவர் தீர்ப்பளிக்க இங்கிலாந்து அணி கடுப்பானது, இதோடு வில் யங் 7 ரன்களில் இருந்த போது ஸ்லிப்பில் கேட்ச் தவற விடப்பட்டது. இந்த இரண்டும்ம் அவுட் என்று ஆகியிருந்தால் நியூசிலாந்து திண்டாடியிருக்கும்.

    Also Read: West Indies vs South Africa | 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் 141 ரன்கள் விளாசிய குவிண்டன் டி காக்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மே.இ.தீவுகள் போராட்டம்

    இது அவுட் இல்லாததால் வில் யங்கும், டெவன் கான்வேயும் அபாரமாக ஆடி 122 ரன்களைச் சேர்த்தனர். ஸ்டூவர்ட் பிராட் (2/22) இந்த கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கான்வே விக்கெட் மூலம் 520 டெஸ்ட் விக்கெட்டுகளுடன், ஆல்டைம் பவுலர்கள் லிஸ்ட்டில் கார்ட்னி வால்ஷைக் கடந்து 6வது இடம் பிடித்தார்.

    வில் யங் நாளின் கடைசி பந்தில் டேன் லாரன்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார், ஆனால் அதற்கு முன்பாக ராஸ் டெய்லர் (46 நாட் அவுட்) உடன் இணைந்து வில் யங் 92 ரன்கள் கூட்டணி அமைத்தார்.

    3ம் நாள் ஆட்டத்துக்கு முன்னதாக நியூஸிலாந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளது. முன்னதாக இங்கிலாந்து அணியில் மார்க் உட் 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். இவரும் லாரன்சும் இணைந்து 8வது விக்கெட்டுக்காக 66 ரன்களைச் சேர்த்தனர். ஹென்றி பந்தில் உட்டின் குச்சி பறந்தது. பிராட். போல்ட் பந்தில் டக் அவுட் ஆனார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் 162 சாதனை டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்டாண்ட் கொடுக்க டேன் லாரன்ஸ் இங்கிலாந்து ஸ்கோரை 300 ரன்களைத் தாண்டி கொண்டு சென்றார். போல்ட் பந்தில் ஆண்டர்சன் எல்.பி. ஆக போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஹென்றி 3 விக்கெட்டுகள்.

    ஆட்ட முடிவில் நியூசிலாந்து 229/3 என்று முடிய, ராஸ் டெய்லர் 46 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
    Published by:Muthukumar
    First published: