முகப்பு /செய்தி /விளையாட்டு / ICC ODI Rankings | ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து புதிய நம்பர் 1 அணி: உலக சாம்பியன் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது

ICC ODI Rankings | ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து புதிய நம்பர் 1 அணி: உலக சாம்பியன் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளியது

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து புதிய நம்பர் 1 அணியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகக்கோப்பையை இங்கிலாந்து 2019ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விதங்களில் வென்று நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. பாவப்பட்ட எதிரணி நியூஸிலாந்து, ஆனால் இப்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து புதிய நம்பர் 1 அணியாகியுள்ளது.

4ம் இடத்துக்குச் சரிந்த இங்கிலாந்து டி20-யில் டாப் இடத்தை தக்கவைத்துள்ளது. டி20யிலும் நியூஸிலாந்து 5ம் இடத்திலிருந்து 3ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

இந்த தரவரிசை 2017-18 போட்டி முடிவுகளை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. மே 2020 வரை விளையாடிய போட்டிகளுக்கு 50% முக்கியத்துவம் கொடுத்தது. இதில் 2019 உலகக்கோப்பையும் அடங்கும்.

இதனையடுத்து வங்கதேசத்தை நியூஸிலாந்து 3-0 என்று தோற்கடித்ததால் நியூஸிலாந்து 121 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா 115 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 3ம் இடத்துக்கு வந்தது. இங்கிலாந்து அணி இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் 4ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இலங்கையை ஓவர்டேக் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி 9வது இடத்துக்கு வந்தது.

டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவைக் காட்டிலும் 5 புள்ளிகள் கூடுதல் பெற்று முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்தும் ஆஸ்திரேலியாவை 2-1 என்றும் தென் ஆப்பிரிக்காவை 3-0 என்றும் இங்கிலாந்து வென்றதையடுத்து முதலிடத்தை தக்கவைத்தது.

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை நியூஸிலாந்து அணி வென்று 5ம் இடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலிருந்து 5ம் இடத்துக்கு சரிந்தது. இலங்கையும் வங்கதேசமும் முறையே 8 மற்றும் 9ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மேலும் சரிந்து 10ம் இடத்துக்குச் சென்றது.

ஒருநாள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் 10ம் இடத்திலும் டி20-யில் 7ம் இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் 6ம் இடத்திலும் டி20-யில் 4ம் இடத்திலும் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தரவரிசையில் 5ம் இடத்திலும் டி20-யில் 6ம் இடத்திலும் உள்ளன.

First published:

Tags: Cricket, England, ICC Ranking