Home /News /sports /

கண்ணீர் விட்ட பிராத்வெயிட்.. சமாதானப்படுத்திய நியூ. வீரர்கள்... நெகிழ வைக்கும் வீடியோ

கண்ணீர் விட்ட பிராத்வெயிட்.. சமாதானப்படுத்திய நியூ. வீரர்கள்... நெகிழ வைக்கும் வீடியோ

NZvWI

NZvWI

ICC World Cup 2019 | NewZeland vs West Indies | 170 ரன்களை தொடுவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

  • News18
  • Last Updated :
நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராத்வெயிட் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி, 148 ரன்கள் விளாசினார். மேற்கு இந்தியத் தீவுகள் சார்பாக, காட்ரெல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கெயில் 87 ரன்கள் எடுத்தார். ஹெத்மியர் 54 ரன்கள் அடித்தார். 170 ரன்களை தொடுவதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன் பின்னர் வந்த பிராத்வொய்ட் ஆட்டத்தையே மாற்றினார்.ஆட்டத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த பிராத்வெயிட் 101 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு விக்கெட் மீதமிருந்தது.



வெற்றிக்கு வெறும் ஆறு ரன்களே தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக தூக்கி அடித்தார். மைதானத்தில் இருந்த அனைவரும் ஆறு ரன்கள் என்று எண்ணியிருந்தபோது, பவுண்டரி லைனில் நின்றிருந்த போல்ட் அபாரமாக கேட்சைப் பிடித்தார். இதனால் 286 ரன்களுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவிலிருந்து மீட்டு வந்து வெற்றிக்கு அருகில் வந்த வாய்ப்பு பறிபோனதை நினைத்து மனமுடைந்த பிராத்வெய்த மைதானத்தில் கண்ணீர் விட்டார். அவரை நியூசிலாந்து வீரர்கள் சமாதானப்படுத்தி விடைக்கொடுத்தனர்.





Also Watch

Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி