கிரிக்கெட் என்பது ஜென்டில்மென் கேம் என்பதை நியூசிலாந்து வீரர்களின் செயல் அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளது.
நியூசிலாந்து வீரர்களை பழிவாங்க முடியாது, ஏனென்றால் அவர்கள் மிகவும் அன்பானவர்கள் என்று கேப்டன் விராட் கோலி அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். விராட் கோலி சொன்னதில் எந்தவித மாற்றமில்லை என்பதை நிரூபித்துள்ளனர் நியூசிலாந்து வீரர்கள்.
19 வயதிற்குட்ப்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து - மேற்கந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 238 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் இலக்கை எட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய வீரர் கிர்க் மெக்கன்சிக்கு தசைபிடிப்பு ஏற்பட்டது. இருந்தப் போதும் அவர் தொடர்ந்து விளையாட முயற்சித்தார், ஆனால் வலி அதிகமாக இருந்ததால் அவர் பெவிலியன் திரும்ப முயற்சித்தார். தசைபிடிப்பு காரணமாக கிர்க் நடக்கமால் தவித்தார். இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவரை பெவிலியன் வரை தூக்கி சென்றனர்.
நியூசிலாந்து வீரர்களின் இந்த செயலலை உலகக் கோப்பை கிரிக்கெட் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை பார்த்து தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.