Home /News /sports /

நியூசிலாந்து வீரர் டெவன் கான்வேவுக்கு கொரோனா பாசிட்டிவ்

நியூசிலாந்து வீரர் டெவன் கான்வேவுக்கு கொரோனா பாசிட்டிவ்

டெவன் கான்வே

டெவன் கான்வே

நியூசிலாந்தின் முக்கியமான வீரர், இடது கை பேட்டர், சிஎஸ்கே வீரர் டெவன் கான்வே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்தின் முக்கியமான வீரர், இடது கை பேட்டர், சிஎஸ்கே வீரர் டெவன் கான்வே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் லண்டனுக்கு வந்த பிறகு PCR சோதனையை மேற்கொண்டார் அதில் கோவிட் உறுதியான பிறகு தனது ஐந்து நாள் தனிமைப்படுத்தலைத் தொடங்கினார். இவருக்கு மாற்று வீரரை நியூசிலாந்து கோரவில்லை.

    ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 2-0 என்று இழந்த நியூசிலாந்து, கேன் வில்லியம்சனையும் இழந்தது. அதோடு நாட்டிங்காம் டெஸ்ட்டில் தோற்ற விதம் நிச்சயம் அவர்களுக்கு பலநாள் தூக்கத்தைக் கெடுக்கவே செய்யும். பேர்ஸ்டோ அடித்த அடி கண்முன்னால வந்து போகுமா இல்லையா?

    ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல், பிசியோ விஜய் வல்லப் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் கிறிஸ் டொனால்ட்சன் ஆகியோருடன் கான்வேயும் கொரோனா பாசிட்டிவ் பட்டியலில் இணைந்தார்.

    அணியில் உள்ள மற்றவர்களுக்கு பிசிஆர் சோதனை முடிவுகள் கொரோனா இல்லை என்று வந்தது. இரண்டாவது டெஸ்டில் கான்வே 46 மற்றும் 52 ரன்களை எடுத்தார், போட்டியின் முன்பு கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா உறுதியான பிறகு, இரண்டாவது டெஸ்டில் பேட்டிங் செய்தார். இறுதி ஆட்டம் இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கான்வே மற்றும் பிரேஸ்வெல் இருவரும் குணமடைந்து தேர்வுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Covid-19, England test, New Zealand

    அடுத்த செய்தி