ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘முதல் டெஸ்டில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது’ – பாக். முன்னாள் வீரர் கருத்து…

‘முதல் டெஸ்டில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது’ – பாக். முன்னாள் வீரர் கருத்து…

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியின் கேப்டன்கள்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியின் கேப்டன்கள்

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட்டை பாகிஸ்தான் அணி சரியான முறையில் கையாளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை எடுத்தது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 612 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 200 ரன்களை எடுத்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, தனது 2வது இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் வெற்றி பெறுவதற்கு 15 ஓவர்களில் 138 ரன்கள் தேவை என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 8 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை விடவும், நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது- முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் அணுகுமுறை எதிர்மறையாக இருக்கிறது. இந்த மைதானம் பாகிஸ்தான் அணிக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான். இதனால் கூடுதல் நுணுக்கங்களுடன் முதல் போட்டியை எதிர்கொண்டு இருக்கலாம். ஸ்பின்னர்கள் மட்டுமே பந்துவீசி கொண்டிருந்தால் எப்படி 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்ற கேள்வி எழுகிறது.

முதல் டெஸ்டில் பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை விடவும் நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது. இந்த மைதானம் மிகவும் சவாலானது என்றாலும் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.

பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை : தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார் ரிஷப் பந்த்!

குறிப்பாக கேன் வில்லியம்சன் மிக எளிதாக பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இன்னும் தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சைமண்ட்ஸ் முதல் ரிஷப் பண்ட் வரை.. கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்கள்!

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்

First published:

Tags: Cricket