NZvsBAN | டி20 கிரிக்கெட்டுக்கு சாவுமணி அடிக்கும் குழி பிட்ச்கள்: தனக்கே குழிதோண்டிய வங்கதேச தோல்வி

நியூசிலாந்து வெற்றி.

டாக்காவில் நேற்று நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை குறைந்த ரன்கள் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் தங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

  • Share this:
    வங்கதேச அணி தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. எல்லா அணிகளையும் தங்கள் பேட்டைக்கு அழைத்து அங்கு அதலபாதாள குழிப்பிட்ச்களைப் போட்டு கிரிக்கெட்டையே குழி தோண்டிப் புதைப்பதுதான் வங்கதேச கிரிக்கெட், இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா சிக்கியது, 4-1 என்று உதை வாங்கிச் சென்றது, இப்போது நியூசிலாந்து படுகுழியில் சிக்கியுள்ளனர். ஐசிசி என்ன தூங்குகிறதா என்று தெரியவில்லை. டி20 கிரிக்கெட் என்றாலே அதிரடி, சிக்ஸர்கள், பவுண்டரிகள்தான். ஆனால் இவர்கள் போடும் பிட்சில் ஸ்கோர் 120ஐத் தாண்ட மாட்டேன் என்கிறது. ஒருமுறை தோனியும் இந்த குழியில் சிக்கி தோல்வி கண்டு வந்ததும் நினைவுகூரத்தக்கது. அயல்நாடுகளில் வங்கதேசத்தை ஏன் பந்தாடுகிறார்கள் என்பதை எப்போதுதான் அந்த அணி நிர்வாகம் புரிந்து கொள்ளப் போகிறதோ?

    நேற்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுக்க தொடர்ந்து அடிய வங்கதேசம் தன் குழியில் தானே விழுந்து திக்குமுக்காடி 76 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி கண்டது. நியூசிலாந்து இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளையும் ஆஃப் ஸ்பின்னர் கோல் மெக்கான்ச்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நியூசிலாந்து அணியும் 62/5 என்று தட்டுத் தடுமாறியது, ஆனால் ஹென்றி நிகோல்ஸ் 36, டாம் பிளண்டல் 30 ஆகியோர் இன்னிங்ஸ்களினால் 128/5 என்று ஓரளவுக்கு ரன் சேர்த்தது.

    ஆனால் தனக்கே குழி தோண்டிக்கொண்டு டி20 கிரிக்கெட்டுக்கும் சாவுமணி அடிக்கும் வங்கதேசம் இரண்டாவது குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஆட்டம் புதனன்று நடைபெறுகிறது.

    Also Read: Oval test: ஷர்துல் தாக்கூர்-ரிஷப் பந்த் சதக்கூட்டணி: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- இங்கிலாந்து ஃபைட்பேக்

    ஆட்டம் தொடங்கிய போது நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 15 ரன்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பிக் ஷாட் ஆடப்போய் வெளியேறினார். பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சயிபுதீன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில் யங் (20), கொலின் டி க்ராண்ட் ஹோம் (0) ஆகியோரை இவர் ஒரே ஒவரில் வீழ்த்தினார். மெஹதி ஹசன் மிராஸ், கேப்டன் டாம் லாதமை 5 ரன்களில் ரிடர்ன் கேட்சில் வீழ்த்தினார்.

    வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 3 பவுண்டரிகளுடன் ஆக்ரோஷமாகத் தொடங்கினார், ஆனால் அவரை ஆஃப் ஸ்பின்னர் மெக்கன்சி வீழ்த்தினார். அஜாஸ் படேல் வந்தார், ஷாகிப் அல் ஹசனை வெளியேற்றினார். தொடர்ந்து படேலை ஆட முடியாமல் போக, மகமுதுல்லா, அஃபிப் ஹுசைன் ஒரே ஓவரில் வீழ்ந்து விட்டனர். 44/6 என்று ஆன வங்கதேசம் எழும்ப முடியவில்லை, முஷ்பிகுர் ரஹிம் 20 நாட் அவுட். ஆட்ட நாயகன் அஜாஸ் படேல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published: