நியூசிலாந்து அணியைச் சேர்ந்த முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் பிரெண்டன் மெக்கல்லம் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் பிரெண்டன் மெக்கல்லம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்று விதமான போட்டிகளிலும் தனது அதிரடியால் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்தவர் மெக்கல்லம்.
டெஸ்ட் போட்டியில் அதிகவேக சதம், டி-20 போட்டியில் 2 சதம் அடித்த முதல் வீரர், டெஸ்டில் முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மெக்கல்லம் படைத்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் விளையாடியபோது பயிற்சியில் மெக்கல்லம் (இடது). (RCB)
2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி-20 லீக் தொடர்களில் மட்டும் பங்கேற்று விளையாடி வந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி-20 லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று (பிப்.3) அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெக்கல்லம் 39 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். போட்டி முடிந்த பின், இந்த சீசனோடு பிக் பாஷ் டி-20 லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்தார்.

‘சூப்பர்மேன்’ போல பறந்த மெக்கல்லம். (Instagram/bazmccullum42)
மேலும், தொடர்ந்து பயிற்சியாளராக பணியாற்றுவது குறித்து யோசித்து வருவதாக மெக்கல்லம் கூறினார். இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 109 போட்டிகளில் மெக்கல்லம் விளையாடியுள்ளது குறிப்பிடதக்கது.
தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரீஸைத் தாண்டாதீர்கள்: ஐசிசி ஃப்ரீ அட்வைஸ்!
பிரதமர் மோடியால் இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 போட்டிகள் இடமாற்றம்!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.