Home /News /sports /

இனி நியூசிலாந்துக்கு ஆட மாட்டாரா ட்ரெண்ட் போல்ட்?- அதிரடி முடிவின் பின்னணி

இனி நியூசிலாந்துக்கு ஆட மாட்டாரா ட்ரெண்ட் போல்ட்?- அதிரடி முடிவின் பின்னணி

ட்ரெண்ட் போல்ட் ஓய்வு

ட்ரெண்ட் போல்ட் ஓய்வு

கிரிக்கெட் உலகை உலுக்கும் செய்தியாக நியூசிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மைய வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து அவரது கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்பட்டுள்ளார். மைய ஒப்பந்தத்தில் இல்லாமல் நியூசிலாந்து அணியில் தேர்வாவது கடினம், எனவே அவர் இனி நியூசிலாந்துக்கு ஆடுவது கடினம் என்றே தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கிரிக்கெட் உலகை உலுக்கும் செய்தியாக நியூசிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மைய வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து அவரது கோரிக்கைக்கு ஏற்ப விடுவிக்கப்பட்டுள்ளார். மைய ஒப்பந்தத்தில் இல்லாமல் நியூசிலாந்து அணியில் தேர்வாவது கடினம், எனவே அவர் இனி நியூசிலாந்துக்கு ஆடுவது கடினம் என்றே தெரிகிறது.

    ட்ரெண்ட் போல்ட் 317 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 169 ஒருநாள் சர்வதேச போட்டி விக்கெட்டுகளையும், 62 டி20 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போல்ட்டுக்கு 33 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகம் நெடுகிலும் பணமழை டி20 லீகுகள் நடைபெற்று வருகின்றன, தென் ஆப்பிரிக்காவில் பெரிய டி20 லீக் ஒன்று தொடங்கவுள்ளது, யுஏஇ-யிலும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கிய அணியுடன் நடைபெறுகிறது, இதில் ஏகப்பட்ட பணம் கொடுக்கிறார்கள், எனவே இனி நாட்டுக்கு ஆடுவதில் என்ன பயன்? மேலும் 4 ஓவர் பவுலிங் 20 ஓவர் களத்தில் நின்றால் போதும் ஏகப்பட்ட பணம், எதற்காக வெயிலிலும் குளிரிலும் இந்த 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடிக்கொண்டு என்று வீரர்கள் கருதுகிறார்கள்.

    இந்நிலையில் ட்ரெண்ட் போல்ட் இரண்டாம் முடிவை எடுத்து விட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் கூறும் காரணம் என்னவெனில் மனைவி 3 குழந்தைகள் இருப்பதாக அவர் கூறுகிறார். பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ட்ரெண்ட் போல்ட் தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்ட கோரிக்கையை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.

    ட்ரெண்ட் போல்ட்டும் தன் முடிவைப் பற்றி கூறுகையில் ஓய்வு பெறுவது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், அதில், “இது உண்மையில் எனது கடினமான முடிவு. இந்த முடிவை சாத்தியமாக்கிய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு என் நன்றிகள்.

    என் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடுவது என்பது குழந்தைப் பருவ கனவு. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக நான் சாதித்தது என்பது எனக்கு பெருமைமிக்கது. இது என் மனைவி மற்றும் என் 3 குழந்தைகள் பற்றியதாகும். குடும்பம்தான் எனக்கு பெரிய தூண்டுகோலாக அமைந்துள்ளது. எனவே குடும்பத்தை முன்னிறுத்தி கிரிக்கெட்டுக்கு பிறகான வாழ்க்கைக்கு எங்களை தயார்ப்படுத்திக் கொள்ள முற்படுகிறோம்.

    இன்னும் கூட நாட்டுக்காக ஆடவே விருப்பம், ஆனால் மைய ஒப்பந்தம் வேண்டாம் என்ற என் முடிவினால் நான் அணியில் தேர்வாவது கடினம் என்ற நிலையையும் மதிக்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளரின் கிரிக்கெட் பயணம் குறுகிய காலத்தினதே, அதனால் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டியுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் ட்ரெண்ட் போல்ட்டின் முடிவை மதிப்பதாகவும், மைய ஒப்பந்தத்தில் உள்நாட்டு கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களே சர்வதேச கிரிக்கெட் தேர்வுக்கு உரித்தானவர்கள் என்பதை ட்ரெண்ட் போல்ட்டும் அறிவார் என்று கூறியுள்ளதால் நியூசிலாந்துக்கு கிரிக்கெட்டிலிருந்து அல்லது சர்வதேச கிரிக்கெட்டில்லிருந்து ட்ரெண்ட் போல்ட் ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, New Zealand

    அடுத்த செய்தி