ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பாகிஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி… வைரல் வீடியோ

பாகிஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி… வைரல் வீடியோ

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி கராச்சியில் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடயிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கராச்சியில் நேற்று பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.  இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதற்காக வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அறை மற்றும் தளங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கிறிஸ்துமஸ் தொப்பிகளை அணிந்திருந்த நியூசிலாந்து அணி வீரர்கள், கேக்குகளை வெட்டி, விருந்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், அஜாஸ் படேல், இஷ் சோதி உள்ளிட்ட வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகளை வீடியோவில் பார்க்க முடிந்தது. இதற்கிடையே, கராச்சி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த தென்னாப்பிரிக்க கேப்டன்…

முன்னதாக பாகிஸ்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி மீண்டும் வெற்றிப் பாதைக்கு செல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணி உள்ளது.

இங்கிலாந்து தொடரில் தோல்வி அடைந்ததன் காரணமாக நியூசிலாந்து டெஸ்டில் முக்கிய மாற்றங்களை பாகிஸ்தான் செய்துள்ளது. விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்ட ரிஸ்வான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சர்ப்ராஸ் அகமது சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் 153 பந்துகளை எதிர்கொண்ட அவர் 86 ரன்களை எடுத்தார்.
 
View this post on Instagram

 

A post shared by BLACKCAPS (@blackcapsnz)முதல்நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் பாபர் ஆசம் 277 பந்துகளில் 161 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

First published:

Tags: Cricket, New Zealand