கேன் வில்லியம்சன் காயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆடுவாரா?

கேன் வில்லியம்சன்

இந்தியாவுக்கு எதிராக ஜூன் 18ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் கேன் வில்லியம்சன் காயத்தை சரி செய்து ஆடுவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

  • Share this:
    தனது இடது முழங்கை காயத்தினால் கேன் வில்லியம்சன் பல மாதங்களாக அவதியுற்று வருகிறார். இதனால்தான் அவரது பேட்டிங் சரியாக அமையவில்லை. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் நாளை (வியாழன், ஜூன் 10, 2021) தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், 2வது டெஸ்ட்டுக்குத் தயாராகி விட்டார், ஏற்கெனவே சவுத்தி, கைல் ஜேமிசன் வேகத்துக்கே திணறும் இங்கிலாந்து நிச்சயம் டிரெண்ட் போல்ட் வருகையினால் கவலையடைந்திருக்கும்.

    இந்தியாவுக்கு எதிராக ஜூன் 18ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் கேன் வில்லியம்சன் காயத்தை சரி செய்து ஆடுவாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

    Also Read:  Euro 2020: வார்ம்- அப் போட்டியில் கிரீஸ்மேனின் அபார பைசைக்கிள் கிக் கோல்- பல்கேரியாவை பந்தாடிய பிரான்ஸ்

    முதல் டெஸ்ட் போட்டிக்கு ஃபிட் என்று கேன் வில்லியம்சன் ஆடினார், இப்போது இடது முழங்கையில் அவருக்கு வலி இருப்பதால் இன்றுதான் அவர், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுவரா என்பது தெரியவரும்.

    கேன் வில்லியம்சன் அப்படி ஆடவில்லை என்றால் அவருக்குப் பதிலாக துர்ஹாம் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களை எடுத்த மற்றொரு நியூசிலாந்து வீரர் வில் யங் என்பவர், வில்லியம்சனுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டிரெண்ட் போல்ட் வருகையினால் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர், போல்ட் என்று நியூசிலாந்து பவுலிங் வலுவாக உள்ளது, சாண்ட்னர் உட்கார வைக்கப்படுகிறார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான பைனலை மனதில் கொண்டு முன்னணி பவுலர் சவுத்தி அல்லது கைல் ஜேமிசனுக்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஓய்வு அளித்தால் மேட் ஹென்றி அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read: எனக்கும் மனசு வலிக்கிறதுச் சாரி- அஸ்வின் கிண்டலுக்கு மஞ்சுரேக்கர் மீண்டும் பதில்

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கவனம் இருந்தாலும் கருத்து முழுக்க இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில்தான் நியூசிலாந்து அணிக்கும் நிர்வாகத்துக்கும் உள்ளது..

    ஆகவே கேன் வில்லியம்சன் காயத்துடன் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
    Published by:Muthukumar
    First published: