• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Pak vs NZ| டாஸ் போட சில நிமிடங்களே இருந்த நிலையில் அதிர்ச்சி: பாகிஸ்தான் தொடரிலிருந்தே விலகிய நியூசிலாந்து

Pak vs NZ| டாஸ் போட சில நிமிடங்களே இருந்த நிலையில் அதிர்ச்சி: பாகிஸ்தான் தொடரிலிருந்தே விலகிய நியூசிலாந்து

பாகிஸ்தான் தொடரிலிருந்து நியூசி. விலகல்

பாகிஸ்தான் தொடரிலிருந்து நியூசி. விலகல்

இன்று ராவல்பிண்டியில் தொடங்குவதாக இருந்த நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து முற்றிலும் கைவிட்டதாக அறிவித்தது.

  • Share this:
    இன்று ராவல்பிண்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தொடங்கவிருத முதல் ஒருநாள் போட்டியின் டாஸ் போடவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக ஒட்டுமொத்த தொடரிலிருந்துமே விலகுவதாக நியூஸிலாந்து அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டது. பாதுகாப்பு காரணங்கள் கருதி தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்தான் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. இதனையடுத்து 3 ஒருநாள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தன் வீரர்களை அறையிலேயே இருக்குமாறும் களத்தில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இரு அணிகளுமே ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வரவில்லை. பார்வையாளர்களுக்கும் ஸ்டேடியத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

    நியூசிலாந்து பாதுகாப்பு ஆலோசகர்கள், பாகிஸ்தானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி நியூசிலாந்து தொடரை ரத்து செய்ய பணித்திருக்கிறது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பாகிஸ்தானிலிருந்து புறப்பட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் அறிக்கையில், தாங்களும் அரசும் முழுபாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம் என்று கூறியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமரிடம் பேசி தங்களிடம் மிகத்துல்லியமான உளவுத்துறை உள்ளது என்றும் வருகை தரும் அணிகளுக்குரிய முழு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு என்றும் உறுதி அளித்திருந்தார்.

    கடைசி நிமிடத்தில் ஆடமாட்டோம் என்பது இப்போது புதிய ட்ரெண்ட் போலும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அங்கலாய்க்கின்றனர், மான்செஸ்டர் டெஸ்ட் தொடரை கடைசி நேரத்தில் இந்தியா கேன்சல் செய்தது போல் இப்போது இது புது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: