உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் நியூஸி. : டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக நம்பர் 1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் நியூஸி. : டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக நம்பர் 1

கோலி-வில்லியம்சன்.

நியூஸிலாந்து அணியை கடைசியாக அவர்கள் மண்ணில் வீழ்த்திய அணி தென் ஆப்பிரிக்காதான், இது 2017-ம் ஆண்டு வெலிங்டன் டெஸ்டில் நடந்தது.

 • Share this:
  பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்று வெற்றி பெற்று ஒயிட்வாஷ் கொடுத்த நியூஸிலாந்து ஆணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

  இதோடு அல்லாமல் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தன் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியாவுக்கு அருகில் வந்து நெருக்கடி அளித்துள்ளது.

  கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் அதி உயர கைல் ஜேமிசன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் பெரிய இன்னிங்ஸ் தோல்வியைக் கண்டது. தொடரை வென்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் நியூஸிலாந்து அணி 118 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது, ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் இந்தியா 114 புள்ளிகளுடனும் இங்கிலாந்து 106 புள்ளிகளையும் தென் ஆப்பிரிக்கா 96 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

  பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் அசைக்க முடியா முதலிடத்தில் உள்ளார்.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்து தற்போடு 420 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் 322 புள்ளிகளையும், இந்தியாவின் 390 புள்ளிகளையும் நியூஸிலாந்து டெஸ்ட் அணி கடந்து சென்று விட்டது. ஆனால் சதவீதப் புள்ளிகளில் ஆஸ்திரேலியா 0.767 என்று முதலிடம் வகிக்க இந்திய அணி 0.722 என்று இரண்டாம் இடம் வகிக்க நியூஸிலாந்து 0.70 என்று இந்தியாவுக்கு அருகில் சவால் அளித்து நிற்கிறது.

  நியூஸிலாந்து அணியை கடைசியாக அவர்கள் மண்ணில் வீழ்த்திய அணி தென் ஆப்பிரிக்காதான், இது 2017-ம் ஆண்டு வெலிங்டன் டெஸ்டில் நடந்தது. அதன் பிறகு உள்நாட்டில் நியூஸிலாந்து வீழ்த்தப்பட முடியா அணியாகத் திகழ்கிறது.
  Published by:Muthukumar
  First published: