ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வீழ்ந்த அணியை சதமடித்து மீட்ட பிலிப்ஸ்: இலங்கை அணியை அடித்து விரட்டிய நியூசிலாந்து அணி!

வீழ்ந்த அணியை சதமடித்து மீட்ட பிலிப்ஸ்: இலங்கை அணியை அடித்து விரட்டிய நியூசிலாந்து அணி!

சதமடித்த மகிழ்ச்சியில் பிலிப்ஸ்

சதமடித்த மகிழ்ச்சியில் பிலிப்ஸ்

நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டும், சாண்டனர் மற்றும் சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, Indiasydneysydneysydneysydney

  இலங்கை அணிக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னியில் நடைபெற்ற சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கான்வே, பின் அலன் தல ஒரு ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் வில்லியம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால், 15 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து அந்த அணி திணறி கொண்டிருந்தது.

  இதனையடுத்து பொறுப்புடன் ஆடிய நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டார். தொடக்கத்தில் நிதனமாக ஆடிய அவர் இறுதியில் அதிரடியாக ஆடி சதம் அடித்து அசத்தினர். 64 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் என 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ராஜித்தா 2விக்கெட்டை வீழ்த்தினார்.

  இதையும் படிங்க: ’பயங்கரமான விராட் வெறியரா இருப்பாரோ’ - கோலியின் உருவத்தை மணலில் வரைந்த பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ வைரல்...

  168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து வந்தது. அதிகப்பட்சமாக சங்கா 35 ரன்னும் ராஜபக்சே 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டும், சாண்டனர் மற்றும் சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: New Zealand, Sri Lanka, T20 World Cup