முதலிடத்துக்கு முன்னேறிய நியூசிலாந்து... அரையிறுதி வாய்ப்பை இழக்கும் தென்னாப்பிரிக்கா...!

6  போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவியுள்ளது.

முதலிடத்துக்கு முன்னேறிய நியூசிலாந்து... அரையிறுதி வாய்ப்பை இழக்கும் தென்னாப்பிரிக்கா...!
நியூசிலாந்து அணி வீரர்கள்
  • News18
  • Last Updated: June 20, 2019, 7:58 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வில்லியம்ஸனின் அசத்தல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் 25 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது.

எட்ஸ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


அதன்படி களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி


பின்னர் ஜோடி சேர்ந்த ஆம்லா மற்றும் டு பிளஸிஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். ஆம்லா அரைசதம் கடந்து 55 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.பொறுப்பாக விளையாடிய வான் டர் டஷன் 67 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஃபெர்ஹியூஷன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 242 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. கப்டில் 35 ரன்களும், முன்ரோ 9 ரன்களும் எடுத்து நடையை கட்டினர். தொடர்ந்து வந்த டெய்லர் மற்றும் நாதன் ஆகியோரும் ஒரு ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

கேன் வில்லியம்ஸன் மற்றும் கிராண்ட்கூம் இருவரும் ஜோடி சேர்ந்து தென் ஆப்ரிக்க பந்துவீச்சை பதம் பார்த்தனர். அதிரடியாக விளையாடிய கிராண்ட்கூம் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

தென் ஆப்ரிக்கா


138 பந்துகள் எதிர்கொண்ட வில்லியம்ஸன் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடித்து சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 3 பந்துகள் மீதமிருந்த போதே வெற்றி இலக்கை எட்டிய நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. 106 ரன்கள் குவித்த வில்லியம்ஸன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 6  போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

Also see...ந்தியா VS பாகிஸ்தான்... வீழாத இந்தியா 50/50

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading