ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது நியூசிலாந்து அணி: விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய கேப்டன் வில்லியம்சன்!

அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது நியூசிலாந்து அணி: விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய கேப்டன் வில்லியம்சன்!

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கேப்டன் வில்லியம்சன்

அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த கேப்டன் வில்லியம்சன்

அரையிறுதி சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பையும் தக்க வைத்து கொண்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaAdelaide Adelaide

  அயர்லாந்து அணிக்கு எதிரான சூப்பர் -12 போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணி தக்க வைத்துள்ளது.

  8 வது டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த  சுற்றுப்போட்டியில் எந்த ஒரு அணியும் இதுவரை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறமால் உள்ளது. காரணம் எந்த அணிக்கு என்ன வேண்டுமானலும் நடக்காலம் என்பதால் சூப்பர்-12 சுற்று போட்டிகள் முடிவுக்கு பின்னர் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன.

  இந்த நிலையில் அடிலெய்டில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து -அயர்லாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் வழக்கான ஆட்டத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

  ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் அயர்லாந்து பந்துவீச்சாளர் லிட்டில்

  இதையும் படிங்க: டி20-யில் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் - மாஸ் காட்டும் சூர்ய குமார் யாதவ்..!

  இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து வந்தது. 16.3 ஓவர்களில் முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து. இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 150 ரன்களை எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அந்த அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லோகி பெர்குசேன் 3 விக்கெட்டும், சவூதி சுழல்பந்து வீச்சாளர்கள் சாண்டனர் மற்றும் சோதி தலா இரண்டு விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Ireland, New Zealand, T20 World Cup